உள்ளூர் செய்திகள்
தடையைமீறி சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தடையை மீறி சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்

Published On 2022-01-23 13:01 IST   |   Update On 2022-01-23 13:01:00 IST
ஈரோட்டில் இன்று முழுஊரடங்யையொட்டில் தேவையின்றி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:

ஈரோட்டில் இன்று முழுஊரடங்யையொட்டில் தேவையின்றி வெளியே சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இன்று முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

மேலும் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே சுற்றும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.  

இந்நிலையில் முழு ஊரடங்கை யொட்டி இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

கருங்கல்பாளையம் சோதனைச் சாவடி, பவானி லட்சுமிநகர் சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, நொய்யல் ஆற்று சோதனை சாவடி என 14 சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  

தேவையின்றி வெளிய சுற்றிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில வாகனங்களை பறிமுதல் செய்தனர்.  

பன்னீர் செல்வம் பார்க், ஜி.எச். ரவுண்டானா, காளைமாடு சிலை, ஸ்வஸ்திக் கார்னர் போன்ற முக்கியமான சாலைகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

ஈரோடு மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள மேம்பாலங்களை போலீசார் தடுப்புகள் வைத்து அடைத்தனர். முக்கியமான கடைவீதி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

முக்கியமான சாலைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதேபோல் கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம், சித்தோடு, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இன்று முழு ஊரடங்கு என்றாலும் ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று காலை ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக வந்திருந்தனர். 

இன்னும் சிலர் நேற்று இரவே ரெயில் நிலையத்திற்கு வந்து விடிய விடிய  காத்திருந்தனர். போக்குவரத்து எதுவும் இல்லாததால் நீண்ட தொலைவில் இருந்து நடந்தே வந்திருந்தனர்.  

இந்நிலையில் இன்று காலை பல்வேறு இடங்களில் கேன் மூலம்  டீ வியாபாரத்தில் ஈடுபட்ட வர்களை போலீசார் அப்புறப்ப டுத்தினர். 

தெருக்களில் மக்கள், இளைஞர்கள் சிலர் ஆங்காங்கே கூடி பேசிக் கொண்டிருப்பதை காண முடிந்தது. போலீசாரை பார்த்ததும் அவர்கள் தெறித்து ஓடினர்.

மேலும் தேவையில்லாமல் தடையைமீறி சுற்றியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Similar News