உள்ளூர் செய்திகள்
விசைத்தறி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

கூலி உயர்வு கேட்டு 10 நாட்களாக வேலை நிறுத்தம்: விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தல்

Published On 2022-01-23 06:43 GMT   |   Update On 2022-01-23 06:43 GMT
ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நம்பியூர்:

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் நம்பியூர் தனியார் திருமண மண்டபத்தில் விசைத்தறி உரிமையா ளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  விசைத்தறி சங்க செயலாளர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.

அப்போது அவர் பேசிய தாவது:&

கூடுதல் வேலையாக  எடுத்து செய்யும் வேலை களுக்கு தரத்தை பொருத்து கடந்த 7 ஆண்டுகளாக துணிகளுக்கு ரூ.8 முதல் ரூ.15 வரை கூலி கொடுத்து வந்தனர். 

கடந்த 7 ஆண்டுகளில் கூலியை உயர்த்தி கொடுக்காததால் பெட்ரோல், டீசல், மூலப் பொருட்கள், மின்கட்டணம், உள்ளிட்டவைகளின் விலை உயர்வாலும் மற்றும் பல்வேறு காரணங்களால் எங்களால் தொடர்ந்து விசைத்தறி இயக்க முடியவில்லை.

 ஆகவே தற்போது  20 சதவீதம் கூலி உயர்வு கோரி கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.  

தமிழக அரசு உடனடியாக பிரச்சனையில் தலையிட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரவேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News