உள்ளூர் செய்திகள்
தெருவில் சுற்றி திரிந்த தெருநாய்களை படத்தில் காணலாம்.

தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

Published On 2022-01-22 07:52 GMT   |   Update On 2022-01-22 07:52 GMT
ஈரோட்டில் சாலையில் நடந்து செல்பவர்களை கூட்டமாக வந்து தெருநாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோட்டில்  சாலையில் நடந்து செல்பவர்களை கூட்டமாக வந்து தெருநாய்கள் துரத்துவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டில் கற்பகம் லே அவுட், மோசிக்கீரனார் வீதி, ஓம் காளியம்மன் கோவில் வீதி, கோட்டையார் வீதி உள்பட 30-க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளது.
 
இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. அவ்வப்போது, வாகனங்களில் செல்பவர் களையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் கூட்டமாக வந்து தெரு நாய்கள் துரத்துவதால் அச்சத்துடனே வீதிகளில் நடக்கும் நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு சில நேரங்களில் நாய்கள் துரத்துவதால் வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மண்டல செயலாளர் அன்புதம்பி கூறியதாவது:-

 ஈரோடு மாநகராட்சி 40-வது வார்டில் தெருநாய் களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டு வருகின்றனர். 

சிறுவர்கள், முதியோர்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். 

பல பேர் நாய்கடித்து சிகிச்சை பெற்றுள்ளனர். நாளுக்கு நாள் தெருநாய் களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

எனவே தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News