உள்ளூர் செய்திகள்
கருங்கல்பாளையம் சோதனைசாவடியில் சாலை மறியல் செய்த பனங்காட்டு படை கட்சியினர்.

கள் இறக்க அனுமதிக்ககோரி சாலை மறியல்- பனங்காட்டு படை கட்சியினர் கைது

Published On 2022-01-21 09:39 GMT   |   Update On 2022-01-21 09:39 GMT
கள் இறக்க அனுமதி கேட்டு கருங்கல்பாளையம் சோதனைசாவடியில் பனங்காட்டு படை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஈரோடு:

கள் இயக்கத்தினர் தொடர்ந்து தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று கள் இறக்க அனுமதி கோரி கள் இறக்கி விற்கும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்ட அறிவிப்புக்கு பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

இந்நிலையில் கருங்கல் பாளையம் சோதனை சாவடி அருகே கள் இறக்க அனுமதி கோரி பனங்காட்டு படை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இதற்காக இன்று ஏ.டி.எஸ்.பி பாலாஜி, குற்றப்பிரிவு டி.எஸ்.பி. அண்ணாதுரை தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை ஈரோடு பனங்காட்டு படை கட்சி மாவட்ட செயலாளர் பாலாஜி பிரபு தலைமையில் நிர்வாகிகள் கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே திரண்டு வந்து அனுமதி கொடுங்கள், அனுமதி கொடுங்கள் கள் இறக்க அனுமதி கொடுங்கள் என கோ‌ஷமிட்டவாறு திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக போலீசார் அவர்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்று அருகில் உள்ள திருமண்டபத்தில் தங்க வைத்தனர்.





Tags:    

Similar News