உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பஸ்கள்.

வரி கட்டாமல் இயக்கிய 5 ஆம்னி பஸ்கள் பறிமுதல்

Published On 2022-01-21 14:54 IST   |   Update On 2022-01-21 14:54:00 IST
தஞ்சையில் வரிகட்டாமலும், தகுதி சான்று இல்லாமலும் இயக்கப்பட்ட 5 தனியார் ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தஞ்சாவூர்:

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு தொலை 
தூர இடங்களுக்கு தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. 

இந்த நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன.

தஞ்சையிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா ? என்பதை கண்காணிக்க போக்குவரத்து ஆணையர் நடராஜன் உத்தரவிட்டார். 

அதன்பேரில், தஞ்சை சரக போக்குவரத்து துணை ஆணையர் கருப்புசாமி வழிகாட்டுதல்படி  மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜயகுமார், அனிதா மற்றும் அதிகாரிகள்  தஞ்சையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது தகுதிச்சான்று இல்லாமலும், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமலும், இன்சூரன்ஸ் இல்லாமலும் பஸ்கள் இயக்கப்பட்டது தெரியவந்தது. 

அவ்வாறு இயக்கப்பட்ட 5 தனியார் ஆம்னி பஸ்களை அதிகாரிகள் 
பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட 5 தனியார் ஆம்னி பஸ்களையும் தஞ்சையில் 
உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு மேல் நடவடிக்கைக்காக எடுத்துச் சென்றனர். 

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 5 தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் 
ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Similar News