உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை ஜெய் குருஜி சமாதிக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அண்ணாமலை.

உள்ளாட்சி தேர்தலுக்கு பா.ஜனதா தயார்-மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

Published On 2022-01-21 08:34 GMT   |   Update On 2022-01-21 08:34 GMT
சிவகிரி அருகே அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகம் புதூரில் ஜெய் குருஜிசமாதி உள்ளது. இந்த சமாதிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் வந்து ஜெய்குருஜியின் சமாதி மற்றும் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்
சிவகிரி:

சிவகிரி அருகே அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகம் புதூரில் ஜெய் குருஜிசமாதி உள்ளது. இந்த சமாதிக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் வந்து ஜெய்குருஜியின் சமாதி மற்றும் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உள்ளாட்சித் தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். பாரத பிரதமரின் 80 சதவீத திட்டங்கள் உள்ளாட்சி  பிரதிநிதிகள் மூலம் தான் நடந்து வருகிறது. 

இதனால் உள்ளாட்சியில் ஊழல் செய்யாத நல்ல பிரதிநிதிகளை அமர்த்தி மக்களுக்கு நல்லதை செய்ய நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.

தமிழகப் பாடநூலில் பல மாற்றத்தை கொண்டுவர வேண்டும். குறிப்பாக பாரதியின் பாடல்கள் கவிதை கருத்துக்கள் என பாரதியின் பங்களிப்பு அதிகமாக இருக்கவேண்டும்.
 
கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பே புதிய இந்தியா எப்படி இருக்கவேண்டும் என நிறைய தகவல்களை பாரதியார் எழுதி வைத்து சென்றுள்ளார். 

அதேபோல் வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் இவரின் படைத்தளபதி குயிலி ஆகியோர் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி கொண்ட பெருமை இவர்களை சேரும். 

இவர்களின் வரலாற்றை பாடநூலில் கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வருக்கு கட்சியின் சார்பில் வலியுறுத்தி இருக்கிறோம்.

2019, 20, 21 குடியரசுதினவிழா அணிவகுப்பில் தமிழகத்தின் பங்களிப்பு இருந்தது. அப்படிஇருக்கும்போது இந்த ஆண்டு இடம் பெறவில்லை என்றால் அதற்கு முழுப் பொறுப்பு மாநில அரசுதான். 

கடந்த ஆண்டு இருந்த அதே அதிகாரிதான் இப்பவும் உள்ளார்கள். கடந்த 3 வருடமாக வேலை செய்த அந்த அதிகாரிகள் தற்போது ஏன் சரிவர வேலை செய்யவில்லை.

குடியரசு தின விழாவில் தமிழகத்தின் பங்களிப்பு இல்லாதது வருந்தக்கூடியது. இதை அடுத்த வருடம் சரி செய்ய அனைவரும் முயற்சி எடுக்க வேண்டுமே தவிர மத்திய அரசின் மீது குற்றம் சொல்லி அதன் மூலமாக அரசியல் லாபத்தை தி.மு.க தேடுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News