உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.
ஈரோடு:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோட்டில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடந்தது.
மின்சார சட்டதிருத்தத்தை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.
வருமானவரி கட்டுவதற்கான வரம்புக்குள் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்.
பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு தொழிற்சங்கத்தினர் வரும் பிப்ரவரி மாதம் 23, 24-ந் தேதிகளில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு ஈரோட்டில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. எச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் ஜீவா சண்முகம் தலைமை தாங்கினார்.
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சுப்பு உள்பட பல்வேறு தொழிற் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.