உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் முன்களப்பணியாளருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்

Published On 2022-01-20 15:40 IST   |   Update On 2022-01-20 15:40:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்தது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்தது.

இந்தியாமுழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்துள்ளதையடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.

தமிழகத்தில் கடந்த 10--ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் ஊசி செலுத்தி உள்ள நிலையில், சிறப்பு முகாம்கள் நடத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து இன்று மாநிலம் முழுவதும் பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.

ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 76 மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றது.

இந்த சிறப்பு முகாமில் 5,500 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Similar News