உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் 20 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 20 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 20 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது . கடந்த 7--ந் தேதி தினசரி பாதிப்பு 100- ஐ கடந்து ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
இந்நிலையில் சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி நேற்று ஒரேநாளில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக மேலும் 906 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 129 கூடுதலாகும்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 191 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 317 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் இதுவரை மாவட் டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 518ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் 83 வயது முதியவர் மற்றும் 73 வயது முதியவர் பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த 2 முதியவர்களும் பரிதாபமாக இறந்தனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 718 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 3,955 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மாலைக்குள் 4 ஆயிரத்தை கடந்து விடும்.
குணமடைந்தவர்கள் எண்ணிக்கையை விட தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதியிலும் தற்போது தினசரி பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. இதனால் மாநகர் பகுதியில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறையினர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 20 இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்பு வைத்து அடைக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் கொரோனா பாதிப்புடன் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.