உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லை அருகே மாமனார் வீட்டை சூறையாடிய வாலிபர் கைது

Published On 2022-01-19 09:25 GMT   |   Update On 2022-01-19 09:25 GMT
நெல்லை அருகே ரூ.3 லட்சம் கடன் தகராறில் மாமனார் வீட்டை சூறையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

நெல்லை அருகே உள்ள கங்கைகொண்டானை அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் கவிதாவை, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அய்யனார்ஊத்து கிராமத்தைச் சேர்ந்த சீனிபாண்டி (வயது 31) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

சீனிபாண்டி, மனைவியின் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவிதாவுக்கும், சீனிபாண்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் கவிதா கணவரை பிரிந்து வெங்கடாசலபுரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

இதனால் சீனிபாண்டி அடிக்கடி மனைவியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு தன்னிடம் கடனாக வாங்கிய ரூ. 3 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் மனைவியுடன் சமரசமாக குடும்பம் நடத்த வலியுறுத்தி உள்ளனர். மனைவியுடன் குடும்பம் நடத்தாவிட்டால் ரூ. 3 லட்சத்தை தரமுடியாது என்றும் கூறிவிட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் சீனிபாண்டி, மனைவியின் ஊரான வெங்கடாச்சலபுரத்திற்கு சென்றார். அங்கு மனைவியின் வீட்டிற்கு சென்று, கடனை தரும்படி கேட்டு தகராறு செய்தார்.

மேலும் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து சூறையாடினர். அங்கு நின்ற மோட்டார் சைக்கிளையும் உடைத்து நொறுக்கினார். தட்டிக்கேட்ட மைத்துனர் மகேசை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள் ளார்.

இதுகுறித்து மகேஷ் கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிபாண்டியை கைது செய்தனர்.
Tags:    

Similar News