உள்ளூர் செய்திகள்
ஈரோடு ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்.

ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

Published On 2022-01-19 08:46 GMT   |   Update On 2022-01-19 08:46 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வந்ததால் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு:

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரும்பி வந்ததால் இன்று ஈரோடு ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

ஈரோடு மாவட்டத்தில் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் உட்பட பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் பல்வேறு பகுதிகளில் வேலைபார்த்து வருகின்றனர். 

குறிப்பாக பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இதேப்போல் தோல் தொழிற்சாலை, செங்கல் சூலை, எலக்ட்ரீசியன் கடைகள், பேக்கரி கடைகள் என மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் குடியிருந்து வேலைபார்த்து வருகின்றனர். 

இந்நிலையில் பொங்கல்பண்டிகையை முன்னிட்டு  நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. வட மாநிலத்தவர்கள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு கடந்த 13&ந் தேதி குடும்பத்துடன் தங்களது மாநிலத்திற்கு கிளம்பி சென்றனர். 

இதனால் ஈரோடு ரெயில்நிலையத்தில் வடமாநிலத்தவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்ததையொட்டி நேற்று முதல் வட மாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்துடன் மீண்டும் ஈரோட்டுக்கு வரதொடங்கி உள்ளனர். இதனால் மீண்டும் ரெயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. 

இந்நிலையில் இன்று 2&வது நாளாக மீண்டும் வடமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் ரெயில்கள் மூலம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்தனர். இதனால் இன்றும் ஈரோடு ரெயில்நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
Tags:    

Similar News