உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

தடுப்பூசி சான்றிதழ் கிடைக்காதவர்களுக்கு சிறப்பு முகாம்

Published On 2022-01-19 08:33 GMT   |   Update On 2022-01-19 08:33 GMT
ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு, சான்றிதழ் கிடைக்காதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, 19 :

ஈரோடு மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு, சான்றிதழ் கிடைக்காதவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு  முகாம் நடத்தி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு காந்திஜி சாலை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் தடுப்பூசி கையிருப்பு உள்ள நாட்களில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

இங்கு முதல், இரண்டாம் தவணை, பூஸ்டர் தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அவசர தேவை மற்றும் பல்வேறு காரணத்துக்காக பரிந்துரையுடன் வருவோருக்கும் இங்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதேநேரம், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கான பதிவு முறையாக செய்யாமல், ஒரு வாரத்துக்கு மேலானாலும், ஊசி செலுத்தியதற்கான பதிவு குறித்த எஸ்.எம்.எஸ்., வருவதில்லை. 

மேலும்  பதிவு செய்தாலும், தடுப்பூசி செலுத்திய தேதி தவறாகவும், தடுப்பூசி பெயர், செல்போன் எண்கள் தவறாக வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். 

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சிவக்குமாரிடம் கேட்ட போது கூறியதாவது:&
தடுப்பூசி செலுத்தியதற்கான பதிவு செய்யும் சர்வர், மாநில அளவில் அவ்வப்போது தாமதமாகிறது. மேலும், மகப்பேறு மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்த வருவதால், ஊசிபோடும் நேரம் தவிர பிற நேரம் மொத்தமாக பதிவதால் தாமதம் ஏற்படுகிறது. அதை தவிர்க்க யோசனை வழங்குகிறோம்.

அதேநேரம், இன்னும் பிற இடங்களிலும் தடுப்பூசி செலுத்தியவர்கள், உரிய தேதியில், உரிய மருந்து பெயருடன், சரியான எண்ணுக்கு பதிவு செய்வதை உறுதி செய்ய, குறிப்பிட்ட நாளுக்கு ஒரு முகாம் நடத்த நடவடிக்கை எடுக்கிறோம். தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, கட்டாயமாக மாற்று ஏற்பாடு செய்யப்படும். 
இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News