உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

வடமாநில தொழிலாளி ‘திடீர்’ சாவு

Published On 2022-01-19 07:55 GMT   |   Update On 2022-01-19 07:55 GMT
ஈரோட்டில் தங்கி பஸ்நிலைய கட்டுமானப்பணியில் வேலைப்பார்த்த வடமாநில தொழிலாளி திடீர் என இறந்துவிட்டார்.
ஈரோடு, 19:

ஈரோட்டில் தங்கி பஸ்நிலைய கட்டுமானப்பணியில் வேலைப்பார்த்த வடமாநில தொழிலாளி திடீர் என இறந்துவிட்டார்.

ஈரோடு மாநகராட்சி மத்திய பஸ்நிலையத்தில் தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த பணியில் பீகார் மாநிலம் சுபால் பகுதியை சேர்ந்த ஜாபீர், முகமது அக்பர், முகமது இஸ்தாக், மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 20பேர் ஈடுபட்டுவருகின்றனர்.

இவர்கள் பஸ்நிலையத்தின் ஒருபகுதியில் தற்காலிக கொட்டகை அமைத்து தங்கி கொண்டு கட்டுமான பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

சம்பவத்தன்று காலை அனைவரும் வேலைக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர். ஆனால் முகமது ஜாபீர் (20) என்பவர் மட்டும் எழுந்திரிக்கவில்லை. 

இதையடுத்து அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர், முகமது ஜாபீர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News