கொடுமுடியில் இன்று காலை முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
தண்டவாளத்தில் தலைவைத்து முதியவர் தற்கொலை
பதிவு: ஜனவரி 19, 2022 12:16 IST
கோப்புப்படம்
கொடுமுடி:
கொடுமுடியில் இன்று காலை முதியவர் ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
கொடுமுடி ரெயில் நிலையத்திற்கு இன்றுகாலை 5.30மணியளவில் ஒரு முதியவர் வந்தார். பின்னர் அவர் ரெயில் நிலையத்தில் அங்கும், இங்கும் நடமாடி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு இருந்தவர்கள் அவர் ஏதோ ஒரு ரெயில் ஏற வந்து உள்ளார் என்று நினைத்து கொண்டு இருந்தனர்.
அப்போது காலை 6 மணியளவில் அந்த வழியாக ஒரு ரெயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென அந்த முதியவர் யாரும் எதிர்பாராத வகையில் தண்டவாளத்தில் தலை வைத்தார்.
இதில் ரெயில் மோதியதில் அந்த முதியவர் தலை துண்டித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசாரும்விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போதுமுதல் கட்ட விசாரணையில் அவர் கொடு முடியை சேர்ந்த பழனிசாமி (65) என்றும் சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.