உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

நெல்லையில் 5 டாக்டர்கள் உள்பட 284 பேருக்கு கொரோனா

Update: 2022-01-17 10:04 GMT
நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 284 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் 5 டாக்டர்களும் அடங்குவர்.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் இன்று புதிதாக 284 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
 
இதில் மாநகர பகுதியில் மட்டும் 159 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். பாளையில் 21 பேருக்கும், மானூரில் 8 பேருக்கும், அம்பை, சேரன்மகாதேவியில் தலா 3 பேருக்கும், பாப்பாக்குடியில் 2 பேருக்கும், களக்காடு, நாங்குநேரியில் தலா ஒருவருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் 5 டாக்டர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள், விடுதியில் உள்ள மாணவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள், பணகுடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அடங்குவர்.

தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் நெல்லையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் பெரும் பாலானோருக்கு லேசான பாதிப்பு இருப்பதால் அவர்கள் வீட்டு தனிமையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் மருத்துவ கல்லூரியில் ஏராளமான படுக்கைகள் காலியாகவே உள்ளன. நேற்றைய நிலவரப்படி சுமார் 60 பேர் மட்டுமே உள்நோயாளியாக கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும் மாவட்டம் முழுவதும் ஏராளமானோருக்கு சளி மற்றும் காய்ச்சல் உள்ளது. அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
Tags:    

Similar News