உள்ளூர் செய்திகள்
திடீர் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது

திடீர் மழையால் மூல வைகையாற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

Published On 2022-01-17 13:47 IST   |   Update On 2022-01-17 13:47:00 IST
வனப்பகுதியில் பெய்த திடீர் மழையால் மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது
வருசநாடு:

வருசநாடு அருகே மூலவைகை ஆறு உற்பத்தி யாகும் வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக மழை அளவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

அதன் காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. மூலவைகை ஆற்றில் நீர்வரத்து முழுமை யாக வற்றி விடும் நிலையில் காணப்பட்டதால் கிராமங்க ளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சார்பில் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2 நாட்களாக வெள்ளிமலை வனப்பகு தியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் வெயில் வாட்டி வரும் நிலையில் தற்போது ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இதற்கிடையே நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கடமலைக்குண்டுவில் மூலவைகை ஆற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிகள் பாதிப்படைந் துள்ளது.

Similar News