உள்ளூர் செய்திகள்
விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து

திருக்குறளின் சிற்பி திருவள்ளுவரை போற்றி பெருமை கொள்வோம்- விஜய் வசந்த் எம்.பி.

Published On 2022-01-15 12:39 IST   |   Update On 2022-01-15 12:39:00 IST
இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தலைவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
கன்னியாகுமரி:

உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினத்தில் வள்ளுவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதுடன், அவரது சிறப்பு குறித்து தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்கின்றனர். 

அவ்வகையில் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தலைவர்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர். 

கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், தனது பேஸ்புக் பக்கத்தில் வள்ளுவனை போற்றி பதிவிட்டுள்ளார். 

‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு". தமிழை உலகெங்கும் பறைசாற்றும் திருக்குறளின் சிற்பி திருவள்ளுவரை இத்தினத்தில் போற்றி பெருமை கொள்வோம்’ என விஜய் வசந்த் குறிப்பிட்டுள்ளார்.

Similar News