திருச்செந்தூர் கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்
- இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
திருச்செந்தூர்:
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக பல லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடைபெற்று வந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர்.
மேலும் பாதயாத்திரை, ஐயப்ப பக்தர்களும் ஏராளமானோர் குவிந்தனர். அதிகாலையில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி ரூ. 100 கட்டண தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.