உள்ளூர் செய்திகள்
சஸ்பெண்டு

பொள்ளாச்சியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு சஸ்பெண்டு

Published On 2022-01-13 06:06 GMT   |   Update On 2022-01-13 06:06 GMT
கோவை மாட்டம் பொள்ளாச்சியில் வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மதிசேகரன்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏட்டு சரவணன் என்பவருடன் பொள்ளாச்சி மீன்கரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக கேரளாவுக்கு மாடு ஏற்றி சென்ற லாரிகள், சரக்கு வாகனங்கள், கார்கள் உள்ளிட்டவற்றை மறித்து உரிய ஆவணங்கள் உள்ளதா? என சோதனை செய்துள்ளனர்.

மேலும் உரிய ஆவணங்கள் வைத்திருந்தாலும் வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்திற்கு புகார் வந்தது.

உடனடியாக சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

போலீசாரின் விசாரணையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதிசேகரன் மற்றும் ஏட்டு சரவணன் ஆகியோர் லஞ்சம் வாங்கியது உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் சஸ்பெண்டு செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News