உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

ஈரோட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு

Published On 2022-01-09 06:32 GMT   |   Update On 2022-01-09 06:32 GMT
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று 3 மாதத்துக்கு பின்பு நேற்று முன்தினம் 103 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று கொரோனா பாதிப்பு 131 ஆக அதிகரித்து உள்ளது. 

நாளுக்கு நாள் தொற்று வேகமெடுத்து வருவதால் சுகாதார துறையினர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரத்து 214 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 12 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 491 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுவரை 711 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News