உள்ளூர் செய்திகள்
ஆவின் பால் பண்ணை ஊழியர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தால் ஆவின் பால் பண்ணை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பவானி:
மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தால் ஆவின் பால் பண்ணை ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் குமார் என்கிற கருப்பணன் (38). இவர் சித்தோடு ஆவின் பால்பண்ணையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார்.
இவருக்கு வைதேகி என்ற பெண்ணுடன் கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகனும், 1 மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு வைதேகி கோபித்து கொண்டு பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார்.
இதனையடுத்து கருப்பணன் பலமுறை மனைவியிடம் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வைதேகி வீட்டிற்கு வராததால் மனவேதனையில் இருந்த கருப்பணன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் பவானி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகையன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.