உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.

ஊக்கத்தொகை வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

Published On 2022-01-05 16:15 IST   |   Update On 2022-01-05 16:15:00 IST
கொரோனா பாதிப்பின் போது பணி யாற்றிய முன்களபணியாளர்களுக்கு ரூ.15ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்தது.
திருப்பூர்

தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக முன்புறம்  நடைபெற்றது. 

இதில் கொரோனா பாதிப்பின் போது பணி யாற்றிய முன்கள பணியாளர்களுக்கு ரூ.15ஆயிரம் ஊக்கத்தொகை   வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் குடிநீர் மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

எனவே உடனே ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Similar News