உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிக்காலில் தமிழ்நாடு மின் துறை அனைத்து பொது தொழிலாளர்கள் சங்க 2-வது மாநில மாநாடு நடந

திருவண்ணாமலையில் மின்துறை பொது தொழிலாளர்கள் மாநாடு

Published On 2022-01-03 10:07 GMT   |   Update On 2022-01-03 10:07 GMT
மின்துறையில் உள்ள 52 ஆயிரம் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என மின்துறை அனைத்து பொது தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை:

தமிழ்நாடு மின் துறை அனைத்து பொது தொழிலாளர்கள் சங்க 2-வது மாநில மாநாடு திருவண்ணாமலையை அடுத்த வங்கிகளில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

 சங்கத் தலைவர் முனியப்பன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் முத்தையா முன்னிலை வகித்தார். மாநில இணைச் செயலாளர் எல்லப்பன் வரவேற்று பேசினார். 

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக ஜுபிடர் ரவி, சிங்க தமிழச்சி, ரமேஷ் குட்டி, சந்திரசேகரன், ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மாநாட்டில் உழைக்கும் மக்களை கடுமையாக பாதித்துள்ள பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும். தமிழக அரசும் மின் வாரியமும் மின்சார ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். மின்வாரியத்தில் காலியாக உள்ள 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். 

காலியாக உள்ள பணியிடங்களில் பணியாற்றிவரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின்வாரியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அனைத்து பதவி உயர்வுகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News