உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை 732 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் மாபெரும் 17-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் ஆணைப்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாநிலம் முழுவதும் மாபெரும் 17-வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 732 இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுவரை கொரோனா தடுப்பூசி போடாதவர்கள், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.