உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

மலைக் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

Published On 2021-12-29 06:11 GMT   |   Update On 2021-12-29 06:11 GMT
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததன் காரணமாக காரட், பீன்ஸ், முட்டை கோஸ் பயிரிடப்பட்ட தோட்டங்களில் மழைநீர் தேங்கி, பயிர் சேதமானது.
அவிநாசி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் விளைவிக்கப்படும் காரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவற்றை வியாபாரிகள் பலரும் வாங்கி விற்கின்றனர். மேட்டுப்பாளையம் மண்டியில் இருந்து அவற்றை வாங்குகின்றனர்.

கடந்த சில நாட்களாக மலை காய்கறிகளின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ காரட் ரூ.120, பீட்ரூட், பீன்ஸ் ஆகியவை தலா ரூ.90, முட்டை கோஸ் ரூ.80க்கு விற்கப்பட்டது. 

பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளை விட மலை காய்கறிகளின் சுவை அதிகம் என்பதால் அவற்றை விரும்பி வாங்கும் மக்கள் அதிகம். ஆனால் திடீர் விலையேற்றத்தால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மலை காய்கறி மொத்தம் வியாபாரி ஒருவர் கூறுகையில்:

நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்ததன் காரணமாக காரட், பீன்ஸ், முட்டை கோஸ் பயிரிடப்பட்ட தோட்டங்களில் மழைநீர் தேங்கி, பயிர் சேதமானது. 

இதுதவிர கடுமையான பனிப்பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து பாதிக்கு பாதி குறைந்துவிட்டது. இதனால்தான் விலை அதிகரித்து வருகிறது என்றார்.
Tags:    

Similar News