உள்ளூர் செய்திகள்
ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்கள் வசித்த பகுதியில் மருத்துவ குழுவினர் பரிசோதனையில் ஈடுபட்ட காட்சி

ஆரணியில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை - 150 பேர் கண்காணிப்பு

Published On 2021-12-23 14:11 IST   |   Update On 2021-12-23 14:11:00 IST
ஆரணியில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான வசித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 150 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை:

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்திலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 13-ந்தேதி காங்கோ நாட்டிலிருந்து வந்த ஆரணி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மேலும் அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் தற்போது அவரது தந்தைக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தனி வார்டில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர்கள் ராணிப்பேட்டை பகுதிக்குச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. அவர்களை சுகாதாரத்துறையினர் தேடி வருகின்றனர்.

ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளான வசித்த பகுதியில் உள்ள வீடுகளில் வசிக்கும் 150 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களை சுகாதார குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.

பரிசோதனை முடிவில் மேலும் யாருக்கும் பாதிப்பு உள்ளதா? என்பது தெரியவரும். 

Similar News