உள்ளூர் செய்திகள்
உடுமலையில் கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலம்.

உடுமலையில் பயன்பாட்டுக்கு வராத நடைமேம்பாலம்

Published On 2021-12-19 08:58 GMT   |   Update On 2021-12-19 08:58 GMT
நடைமேம்பாலம் கட்டப்பட்டு 2 வருடத்திற்கு மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாமல் உள்ளது.
உடுமலை:

உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே ரூ.1.50 கோடி செலவில் நடை மேம்பாலம் கட்டப்பட்டது. 

பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க இந்த நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த நடைமேம்பாலம் கட்டப்பட்டு 2 வருடத்திற்கு மேலாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்காமல் இருந்து வருகிறது. 

எனவே உடனடியாக இதை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News