செய்திகள்
கேபிள் அமைக்கும் பணி நடைபெறுவதை படத்தில் காணலாம்.

உடுமலை ரெயில்வே வழித்தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் தீவிரம்

Published On 2021-11-30 06:28 GMT   |   Update On 2021-11-30 06:28 GMT
பிரத்யேக ரெயில்பெட்டி வாயிலாக உடுமலை பகுதியில் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
உடுமலை:

திண்டுக்கல், பாலக்காடு, பொள்ளாச்சி-போத்தனூர் அகல ரெயில்பாதையில் மின்மயமாக்கும் திட்டம் கடந்த 2019ல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக போத்தனூர் வழித்தட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பொள்ளாச்சி-திண்டுக்கல் வரையிலான 121 கி.மீ., தொலைவுக்கு மின்மயமாக்கும் திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது.

முதற்கட்டமாக ஆங்காங்கே டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்று தற்போது பிரத்யேக ரெயில்பெட்டி வாயிலாக உடுமலை பகுதியில் கேபிள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் சந்திப்பு வரை இப்பணிகள் நிறைவு பெற்ற பிறகு திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உடுமலை ரெயில் பயணிகளிடையே ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News