செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

7 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கன மழை பெய்யும்- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-11-20 09:04 GMT   |   Update On 2021-11-20 10:15 GMT
22-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உள் கர்நாடகா மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்யும்.

டெல்டா மாவட்டங்கள் வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும். நாளை 21-ந் தேதி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கன மழையும், வட கடலோர தமிழகம் அதனையொட்டிய உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.



22-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும். 23, 24 தேதிகளில் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு மழை அதிகரிக்க கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருபுவனம், ஜமுனா மரத்தூர் தலா 7 செ.மீட்டர் பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

Similar News