செய்திகள்
சாலை மறியல்

திருத்தணி அருகே ஏரி கால்வாயை தூர்வாரக்கோரி கிராமமக்கள் மறியல்

Published On 2021-11-19 15:27 IST   |   Update On 2021-11-19 15:27:00 IST
திருத்தணி அருகே ஏரி கால்வாயை தூர்வார வேண்டும் என்று சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆற்காடு குப்பத்தில் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்:

சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அருகே ஆற்காடு குப்பத்தில் ஊரக வளர்ச்சி கட்டுப்பாட்டில் ஏரி உள்ளது.

இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் தற்போது பெய்து வரும் கனமழையால் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. ஆனால் ஆற்காடு குப்பத்தில் உள்ள ஏரிவரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணத்தால் ஏரிநிரம்பவில்லை. எனவே கால்வாயை தூர்வார வேண்டும் என்று சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆற்காடு குப்பத்தில் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் வட்டாட்சியர் ஜெபராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதன் பேரில் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News