செய்திகள்
கடலூரில் தொடர் மழை- ஆறுகளில் வெள்ளபெருக்கு
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆறு மற்றும் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர்:
சென்னை அருகே நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கும், புதுவைக்கும் இடையே இன்று காலை கரையை கடந்தது.
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை பெய்தது. நேற்று மதியத்துக்கு பிறகு மழையின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.
கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகனங்களின் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆறு மற்றும் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கெடிலம், தென்பெண்ணை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
இதைத்தொடர்ந்து ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.