செய்திகள்
டிரோன்

சென்னையில் கண்காணிப்பு பணிக்காக ரூ.3.60 கோடியில் நடமாடும் டிரோன் காவல் பிரிவு- அரசு அனுமதி

Published On 2021-11-17 10:03 GMT   |   Update On 2021-11-17 10:03 GMT
சென்னை நகரில் குற்றங்கள் நடைபெறும் இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலைகளில் பணிபுரியும் போலீசாருக்கு உதவும் வகையில் நடமாடும் டிரோன் காவல் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.
சென்னை:

சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கையின்போது சென்னையில் கண்காணிப்பு பணிக்காக நடமாடும் டிரோன் காவல் பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் சென்னை பெருநகரில் கூட்டமான இடங்களையும், நீண்ட தூர சாலைகளையும் கண்காணிப்பதற்காக ரூ. 3.60 கோடி செலவில் நடமாடும் டிரோன் காவல் அலகு ஏற்படுத்துவதற்கு நிர்வாக அனுமதியை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை நகரில் குற்றங்கள் நடைபெறும் இடங்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் வி.ஐ.பி.க்கள் செல்லும் சாலைகளில் பணிபுரியும் போலீசாருக்கு உதவும் வகையிலும், பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையிலும் நடமாடும் டிரோன் காவல் பிரிவு செயல்படுத்தப்படுகிறது.

இதில் 3 வகையான நடமாடும் டிரோன் போலீஸ் யூனிட்டுகள் ஏற்படுத்தப்படுகின்றன. கட்டுப்பாடு அறையுடன் செயல்படும் இந்த யூனிட்டுகள் 40 அடி அகலம், 10 அடி உயரத்தில் இருக்கும். அங்கிருந்தபடி டிரோன்களை பறக்கவிட்டு கண்காணிக்கப்படும். ஒவ்வொரு யூனிட்டிலும் 9 டிரோன்கள் இருக்கும்.

மெரினா கடற்கரை, பாண்டி பஜார் போன்ற இடங்களில் நடமாடும் டிரோன் காவல் பிரிவு செயல்படும்.

Tags:    

Similar News