செய்திகள்
பல்லடத்தில் அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்
பல்லடம் எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம். ஆனந்தன் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
பல்லடம்:
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பல்லடம் நகரத்திலுள்ள 18 வார்டுகளில் அ.தி.மு.க. தேர்தல் பணி குறித்த கூட்டம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.பரமசிவம் தலைமை வகித்தார்.
நகரச் செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். இதில் பல்லடம் எம்.எல்.ஏ. எம்.எஸ்.எம். ஆனந்தன் கலந்து கொண்டு உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தர்மராஜ், வைஸ் பழனிச்சாமி, பானு பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.