செய்திகள்
மாயம்

உவரியை சேர்ந்த கல்லூரி மாணவி திடீர் மாயம்

Published On 2021-11-16 15:55 IST   |   Update On 2021-11-16 15:55:00 IST
உவரியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள்.
நெல்லை:

உவரி பகுதியைச் சேர்ந்த வர் ரமேஷ். இவரது மகள் அல்ட்ரின் ரேஷ்மா (வயது 19). இவர் நெல்லையில் உள்ள விடுதியில் தங்கி இருந்து, ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 11-ந்தேதி கல்லூரி விடுதியில் இருந்து வீடு செல்வதாக கூறி, புது பஸ் நிலையம் சென்றார்.

ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து ரமேஷ், பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.


Tags:    

Similar News