செய்திகள்
கே.ஈச்சம்பாடி அணை

தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு- கே.ஈச்சம்பாடி அணை நிரம்பியது

Published On 2021-11-13 12:50 IST   |   Update On 2021-11-13 12:50:00 IST
தொடர் மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மொரப்பூர்:

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கம்பைநல்லூர் அருகே உள்ள கே.ஈச்சம்பாடி தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையில் இருந்து வலது மற்றும் இடது புற கால்வாய்கள் அமைக்கப்பட்டு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 6,250 ஏக்கர் நிலம் கால்வாய் மூலம் பாசனம் பெற்று வருகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கே.ஈச்சம்பாடி அணை நிரம்பியது. அணையில் இருந்து தண்ணீர் சீறிபாய்ந்து வெளியேறுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.


Tags:    

Similar News