செய்திகள்
பள்ளி தலைமையாசிரியரை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர்.

பெரியார் புத்தகம் - பா.ஜ.க. எதிர்ப்பால் பரபரப்பு

Published On 2021-11-12 12:50 IST   |   Update On 2021-11-12 12:50:00 IST
நூலகத்துக்கு என்றால் குறிப்பிட்ட பிரதிகளை மட்டும் வழங்கியிருக்க வேண்டும். 2,000 பிரதிகள் எதற்காக வழங்கப்பட்டன? என தலைமை ஆசிரியரிடம் விசாரித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள நூலகத்துக்கு விரும்புவோர் புத்தகங்களை தானமாக வழங்கலாம் என பள்ளி நிர்வாகம் அறிவித்திருந்தது. 

இதையடுத்து தன்னார்வலர்கள் புத்தகங்கள் வழங்கி வந்தனர். ஒருவர் நூலகத்துக்கு மூட்டை நிறைய புத்தகங்களை வழங்கியுள்ளார். அதில் ஈ.வெ.ரா.,எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்’ புத்தகம் 2,000 பிரதிகள் இருந்துள்ளன. இதையறிந்ததும் திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க.தலைவர் செந்தில்வேல் தலைமையில் பா.ஜ.க.,வினர், ‘புத்தகங்களை யாருக்கும் தரக்கூடாது’ என பள்ளியை முற்றுகையிட்டனர்.

‘நூலகத்துக்கு என்றால் குறிப்பிட்ட பிரதிகளை மட்டும் வழங்கியிருக்க வேண்டும். 

2,000 பிரதிகள் எதற்காக வழங்கப்பட்டன? என தலைமை ஆசிரியரிடம் விசாரித்தனர். அப்போது ‘புத்தகங்கள் நூலக பயன்பாட்டுக்கு மட்டுமே. மாணவிகளுக்கு வினியோகிப்பதில்லை என கல்வி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். 

இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் கூறுகையில், 

பள்ளி நூலகங்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து புத்தகங்கள் மொத்தமாக பெறப்பட்டுள்ளன. யாருக்கும் வினியோகிக்கவில்லை. இந்த நூல்கள் வழங்கியவரிடமே திரும்ப ஒப்படைக்கப்பட்டு விடும் என்றார். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News