செய்திகள்
கோப்புபடம்.

தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் - பல்லடம் வட்டாரத்தில் 5 கிராம ஊராட்சிகள் தேர்வு

Published On 2021-11-11 07:23 GMT   |   Update On 2021-11-11 07:23 GMT
உணவு உற்பத்தியை பெருக்கும் வகையில் தரிசு நிலங்களை வளமாக்கும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பல்லடம்:

பல்லடம் வட்டார கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை வளமாக்கும் திட்டத்தில் 5 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பல்லடம் வேளாண்மை துறை உதவி இயக்குனர் பாமா மணி கூறியதாவது:-

உணவு உற்பத்தியை பெருக்கும் வகையில் தரிசு நிலங்களை வளமாக்கும் திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட சில கிராமங்களை தேர்வு செய்து அரசு திட்டங்கள் அனைத்தும் அந்த கிராமங்களுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். 

இதன் மூலம் கிராமங்களில் உள்ள தரிசு நிலங்கள் வளமாக்கப்படும் .அந்தவகையில் பல்லடம் வட்டாரத்தில் கணபதிபாளையம், செம்மிபாளையம், பணிக்கம்பட்டி, பருவாய்,கா.கிருஷ்ணாபுரம் ஆகிய 5 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

இந்த கிராம ஊராட்சிகளில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பராமரிப்பு துறை, உள்ளிட்ட 13 அரசு துறைகளின் பங்களிப்போடு தரிசு நிலத்தை வளமாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News