செய்திகள்
கோப்புபடம்

திருமூர்த்திமலை பகுதியில் உணவு கிடைக்காமல் தவிக்கும் குரங்குகள்

Published On 2021-11-11 10:28 IST   |   Update On 2021-11-11 10:28:00 IST
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
உடுமலை:

உடுமலையை அடுத்த மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒரே குன்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். 

மலை அடிவாரத்தில் இருந்து சற்று உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. அது தவிர கோவிலுக்கு வரும் வழியில் படகு இல்லம், சிறுவர்பூங்கா, நீச்சல் குளம், திருமூர்த்தி அணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. அவற்றை பார்வையிடவும் அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர்.

இதனால் உடுமலை பகுதியின் சிறந்த சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக திருமூர்த்திமலை விளங்கி வருகிறது. கோவில் வனப்பகுதியின் அடிவாரத்தில் உள்ளதால் அங்கு ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. அங்கும் இங்கும் ஓடும் குரங்கு சேட்டையை பார்த்து சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். 

இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பஞ்சலிங்க அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. 

இதன் காரணமாக கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இதனால் அடிவாரப் பகுதியில் வசித்து வந்த குரங்குகள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன. யாராவது வருவார்களா உணவு தருவார்களா என்று காத்துக் கிடக்கிறது. 

அப்போது பக்தர்கள் வந்தால் அவர்கள் வைத்திருக்கும் பைகளை குரங்குகள் பறித்து செல்கிறது. இதனால் அங்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 
Tags:    

Similar News