செய்திகள்
பருவமழை

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Published On 2021-11-09 00:22 IST   |   Update On 2021-11-09 00:22:00 IST
கனமழை காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தென்காசி:

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திங்கள், செவ்வாய் என இரு தினங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. 

இந்நிலையில், கனமழை காரணமாக நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். 
Tags:    

Similar News