search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹெலிகாப்டர்
    X
    ஹெலிகாப்டர்

    தமிழகத்தில் வெள்ள பாதிப்பு- தயார் நிலையில் 87 ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 128 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில், 71 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 79 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 36 பேரும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழகத்தில் நடைபெற்று வரும் வெள்ள மீட்பு பணிகள் தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 15.62 மி.மீட்டர். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 79.13 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 128 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில், 71 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 79 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 36 பேரும், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு தீயணைப்புத் துறை, அனைத்து விதமான தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளது. தீயணைப்புத் துறைக்கு சுவர் இடிந்து விழுந்தது. மழை நீர் சூழ்ந்து, பாம்புகள் தென்பட்டது, மரம் விழுந்தது, வாகனங்கள் மழை நீரில் சிக்கிக்கொண்டது போன்ற 261 புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீன்வளத்துறை மூலம் 90 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் காலங்களில் ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு 87 ஹெலிபேட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×