செய்திகள்
அம்மா உணவகம்

உணவு வழங்க தயார் நிலையில் 403 அம்மா உணவகங்கள்

Published On 2021-11-08 08:42 GMT   |   Update On 2021-11-08 11:07 GMT
வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை:

சென்னையில் பருவமழையின் தாக்கம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாநகராட்சி செய்து வருகிறது.

ஏரிகள் திறக்கப்பட்டு இருப்பதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கரையோரத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையையும் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

அடையார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் கரையோர மக்கள் பாதுகாப்பாக தங்கும் முகாமிற்கு அழைத்து வரப்படுகிறார்கள். 200 வார்டுகளில் செயல்படும் 403 அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் உணவு அருந்தவும் போதுமான அளவு உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அம்மா உணவக ஊழியர்கள் 3 வேளையும் தேவைக்கு ஏற்ப உணவுகளை தயாரித்து பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் செயல்படும் 2 அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிடவும் மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது. 20 உணவு தயாரிக்கும் கூடங்களில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்கு உணவு தயாரிக்கப்படுவதாக துணை கமி‌ஷனர் விஷ்ணு மகாஜன் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை

Tags:    

Similar News