செய்திகள்
புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு
ஏரிகள் திறக்கட்டதால், நீர் வெளியேறும் வாய்க்கால்களின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக கன மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரி நீர் திறக்கப்பட்டு, தாழ்வான பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் முழுக் கொள்ளளவு 25.55 அடியில், இன்று மதியம் நீர்மட்டம் 21.45 அடியாக இருந்தது. ஏரிக்கு நீர்வரத்து 1,590 கன அடியாக உள்ள நிலையில், ஏரியில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுகிறது. இன்று மதியம் 2-வது மதகில் இருந்து முதல் கட்டமாக வினாடிககு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
பிற்பகல் 3 மணியளவில் ஏரிக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்ததால் உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. வினாடிககு 1000 கன அடி என்ற அளவில் நீர் திறக்கப்பட்டது.
இதேபோல் புழல் ஏரியில் இருந்து திறக்கபப்டும் உபரி நீரின் அளவு 1000 கன அடியில் இருந்து 2000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் திறக்கட்டதால், நீர் வெளியேறும் வாய்க்கால்களின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.