செய்திகள்
பாதுகாப்பான தீபாவளி-கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
பட்டாசுகளை வெடிக்கும் போது நமது கவனக்குறைவால் பல்வேறு ஆபத்துக்கள் நிகழும்.
திருப்பூர்:
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் தெற்கு மற்றும் பல்லடம் சார்பாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பாதுகாப்பான தீபாவளியை கொண்டாட உறுதிமொழி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று திருப்பூர் அரசு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரியில் உள்ள குமரன் அரங்கில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னதாக அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், இந்த தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடனும் மிகுந்த கவனத்துடனும் கொண்டாட வேண்டும்.
பட்டாசுகளை வெடிக்கும் போது நமது கவனக்குறைவால் பல்வேறு ஆபத்துக்கள் நிகழும். அதை தடுத்திடவேண்டும். அதிக சத்தமுள்ள பட்டாசுகளை வெடிப்பதால் சாலைகளில் விபத்துகள் நடக்கும்.
அதிக சத்தமுள்ள பட்டாசுக்களை வெடிக்க வேண்டாம் என்றார். பிறகு மருத்துவமனைகள் அமைந்துள்ள அமைதி பகுதிகளில் வெடிகளை வெடிக்க மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.