செய்திகள்
தற்கொலை

வேலூர் கஸ்பாவில் 3 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை

Published On 2021-10-05 16:14 IST   |   Update On 2021-10-05 16:14:00 IST
வேலூர் கஸ்பாவில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 3 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்துகொண்டார்.
வேலூர்:

வேலூர் கஸ்பா செல்வபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி திவ்யா (வயது 32). இந்த தம்பதிக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது. இதனால் திவ்யா மனமுடைந்து காணப்பட்டார். நேற்று காலை வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். அந்த நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த திவ்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் தெற்கு போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 3 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News