செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

Published On 2021-09-18 07:53 GMT   |   Update On 2021-09-18 07:53 GMT
தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
உடுமலை:

உடுமலை தாலுகா அலுவலகத்திலுள்ள அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உடுமலை தீயணைப்புத்துறை சார்பில் பருவ மழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் தீத்தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டது. தாசில்தார் ராமலிங்கம் தலைமை வகித்தார்.

தீயணைப்பு நிலைய அலுவலர் அரிராமகிருஷ்ணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீ விபத்து, பருவ மழை தீவிரமடைந்து வருவதால் மழை வெள்ள பாதிப்புகள், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கினர்.

மேலும் தீ விபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News