செய்திகள்
கோப்புபடம்

இயற்கை முறையில் வெண்டைக்காய் சாகுபடி

Published On 2021-09-18 07:21 GMT   |   Update On 2021-09-18 07:21 GMT
தத்துப்பூச்சிகள் செடிகளின் வளர்ச்சியைப்பாதித்து அதிக அளவு மகசூல் பாதிப்பினை ஏற்படுத்துகிறது.
உடுமலை:

உடுமலை சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு குறிப்பிட்ட இடைவெளியில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் சாகுபடியில் நோய்த்தாக்குதலை கட்டுப்படுத்த இயற்கை வேளாண் முறைகளை பின்பற்ற விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இச்சாகுபடியில் செடிகளை தத்துப்பூச்சி, தண்டு மற்றும் காய்துளைப்பான், நூற்புழு மற்றும் சிவப்பு சிலந்தி உள்ளிட்ட நோய்கள் தாக்குகின்றன. இதில் தத்துப்பூச்சிகள் செடிகளின் வளர்ச்சியைப் பாதித்து அதிக அளவு மகசூல் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. 

தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்பக்கொட்டை சாற்றினை குறிப்பிட்ட இடைவெளியில் தெளிக்கும் முறையை விவசாயிகள் பின்பற்றுகின்றனர். இதனால் காய்களின் தரம் அதிகரிப்பதுடன் சாகுபடி செலவும் குறைகிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News