செய்திகள்
தியேட்டர்

புதுப்படங்கள் வராததால் நாகையில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்படவில்லை

Published On 2021-08-24 15:37 IST   |   Update On 2021-08-24 15:37:00 IST
புதுபடங்களின் வரவை பொறுத்தே தியேட்டர்கள் திறக்கப்படும் என நாகை தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
நாகப்பட்டினம்:

தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதில் 50 சதவீத ரசிகர்களுடன் நேற்று முதல் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் சினிமா தியேட்டர் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி போடப்பட்டு இருப்பது அதன் உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து நாகை மாவட்டத்தில் உள்ள 5 சினிமா தியேட்டர்களை திறக்க முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் புதுப்படங்கள் வராததால் நாகை மாவட்டத்தில் உள்ள 5 சினிமா தியேட்டர்கள் நேற்று திறக்கப்படவில்லை.

வருகிற 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) அல்லது அடுத்த மாதம் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புதுபடங்களின் வரவை பொறுத்தே தியேட்டர்கள் திறக்கப்படும் என நாகை தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Similar News