இன்றைய ராசிபலன் 15.1.2026: இந்த ராசிக்காரர்களுக்கு கல்யாண முயற்சி கைகூடும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நிதானத்துடன் செயல்படவேண்டிய நாள். ஒவ்வாத உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடல்நலம் பாதிக்கலாம். செலவுகள் அதிகரிக்கும்.
ரிஷபம்
விருந்தினர் வருகையால் வியப்படையும் நாள். எதிர்பார்த்த உதவி எளிதில் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மிதுனம்
புதிய முயற்சியில் வெற்றி உண்டு. பொருளாதார நிலை உயரும் நாள். உறவினர்கள் வழியில் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படும். மறதியால் சில பணிகள் விட்டுப் போகலாம்.
கடகம்
உறவினர்களின் உதவி கிட்டும் நாள். பயணங்களால் பலன் உண்டு. ஆக்கப்பூர்வமான செயலொன்றை செய்து முடிப்பீர்கள்.
சிம்மம்
பிரபலஸ்தர்களைச் சந்தித்து மகிழும் நாள். இடமாற்றங்களால் இனிமை ஏற்படும். தனவரவு தாராளமாக வந்தாலும் செலவும் அதிகரிக்கும்.
கன்னி
பொருளாதார பற்றாக்குறை அகலும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் உண்டு.
துலாம்
எதிர்பாராத பணவரவால் இதயம் மகிழும் நாள். இருப்பினும் செலவு அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடலாம்.
விருச்சிகம்
வாழ்த்து செய்திகளால் வளம் காணும் நாள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டு. எடுத்த முயற்சி பலன் தரும்.
தனுசு
கல்யாண முயற்சி கைகூடும் நாள். குடும்ப வருமானம் உயரும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
மகரம்
புதிய வாய்ப்புகள் வந்து சேரும் நாள். நீண்டதூரப் பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். சொன்ன சொல்லை காப்பாற்ற இயலும்.
கும்பம்
சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். காலையில் செய்ய மறந்த வேலை ஒன்றை மாலையில் செய்ய நேரிடும். உடல் நலனில் கவனம் தேவை. வருமானம் திருப்தி தரும்.
மீனம்
அயல்நாட்டிலிருந்து ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.