செய்திகள்
கைது

தலைமறைவான பிரபல ரவுடி கைது

Published On 2021-08-17 15:50 IST   |   Update On 2021-08-17 15:50:00 IST
படப்பை குணாவை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சொந்தமான நிலத்தின் பட்டாவை பெற்று சென்று அடியாட்களை விட்டு மிரட்டியதாக படப்பை குணா மீது சுங்குவார்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், ரவுடி படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த படப்பை குணாவை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில், சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார்.

படப்பை குணா மீது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி என 24 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News