செய்திகள்
சீர்காழியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம்

சீர்காழியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் - உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2021-08-04 16:30 IST   |   Update On 2021-08-04 16:30:00 IST
சீர்காழியில், ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உதவி கலெக்டர் நாராயணன் தொடங்கி வைத்தார்.
சீர்காழி:

சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் சீர்காழி ரோட்டரி சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சீர்காழி ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, தாசில்தார் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் கொரோனா விழிப்புணர்வு ஊர்வலத்தை உதவி கலெக்டர் நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

ஊர்வலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி கடைவீதி வழியாக பழைய பஸ் நிலையத்தை வந்தடைந்தது. இதில் முன்னாள் ரோட்டரி சங்க தலைவர்கள் செல்வகுமார், பாஸ்கரன், சாமிசெழியன், சுசீந்திரன், கண்ணன், சிவசண்முகம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.

Similar News